Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சொத்து வேணும் எனக்கு கொடுங்க” அப்பாவை கொலை செய்த மகன் ….!!

சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் சிவதாபுரம் அருகே ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வசந்தா என்கின்ற மகளும், பூபதி என்கின்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் பூபதிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று(ஜன.19) அதிகாலை இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூபதி தன்னை பெற்ற தந்தை என்று கூட பாராமல் பழனிச்சாமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பழனிச்சாமி நிகழ்விடத்திலயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

murder

இது குறித்து தகவலறிந்த அங்கு சென்ற காவல் துறையினர் பழனிசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து, பூபதியை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சொத்துத் தகராறில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |