மகளின் செல்போன் நம்பரை கேட்டவரை தந்தை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர் திருநாவுக்கரசர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இதில் மூத்த மகன் பார்த்திபன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் அவருடைய மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை பார்த்திபன் கேட்டதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக அந்த பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அவருடைய மகன் விக்னேஷ் மற்றும் நண்பர் சிவராமன் ஆகியோர் பார்த்திபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவரை பலமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் பார்த்திபன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து பார்த்திபனின் தம்பி இளமாறன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குமார், அவருடைய மகன் விக்னேஷ், நண்பர் சிவராம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.