உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக சார்பில் நடந்த உண்ணவிரத போராட்டத்தில் தான் ( கோயம்புத்தூரில் ஜனவரியில் நடைபெற இருக்கும் ) போராட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து பொதுச் செயலாளர் இந்த போராட்டத்தை தான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அறிவித்தார்.. இப்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
சில மாவட்டங்களில் மழையினால் தள்ளி வைத்து விட்டார்கள். நம்முடைய மாவட்டத்திலும் நடத்தலாம் என பார்க்கும்போது மூன்று மாவட்டத்திலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பேசியதில்… நாம் கொஞ்சம் தள்ளி போராட்டம் வைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தார்கள். எனவே பொதுச் செயலாளரிடம் கேட்டோம். அவரும் சரி தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இப்போது வைத்திருக்கலாம்.
இன்னும் ஒரு வாரத்தில் கூட வைத்திருக்கலாம். ஏன் இப்போது இருந்து ஒரு 15 நாள் இடைவெளி விடுகிறோம் என்றால்… 3 ஆம்தேதி பேரூராட்சியில் போராட்டம். பேரூராட்சி நமக்கு அதிகமாக இருக்கிறது. கன்னியாகுமரி தான் அதிகமான பேரூராட்சி. அதற்கு பிறகு கோயம்புத்தூர் மாவட்டம். அதில் பார்த்தீர்கள் என்றால்… ஒவ்வொரு பேரூராட்சியிலும் மூன்றாம் தேதி போராட்டத்தை நடத்தி முடித்து விட வேண்டும்.
நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை வசதி பிரச்னை இதையெல்லாம் சேர்த்து, நோட்டீஸ் அடித்து.. வீடு வீடாக கட்டாயம் கொடுக்க வேண்டும், கொடுத்து அதேபோல எல்லோரையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க வேண்டும் என தெரிவித்தார்.