ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த அனுமதி அளிக்க வேண்டும், என ஜல்லிக்கட்டு விழா குழு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.அவர்களது மனுவில் கூறியிருப்பதாவது, “வருகிற (ஜனவரி 16) தை மாதம் 3ம் தேதி மாபெரும் புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று உறுதி அளிக்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.