சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்ததும் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.