Categories
அரசியல்

டோக்கன் தனியா கொடுங்க….. மதுவை தனியா கொடுங்க…. நாளை திறப்புக்கான பணி மும்மரம் …!!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல்  மது விநியோகத்துக்கான  நடவடிக்கையை டாஸ்மாக் முழு வீச்சில் செய்து வருகின்றது.

இதற்காக கலர் கலர் வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற விதிகளை உரிய வழியில் நடைமுறைப்படுத்த டிஜிபியும் மாநில காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். டோக்கன் தர தனியாக  கவுண்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதே போல தமிழகத்தில் 5ஆயிரம் என்ற அளவில் டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தாலும் 3850 கடைகள் மட்டுமே திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கின் ஐந்து மண்டல மேலாளர் களுக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  சென்னையை சுற்றியுள்ள 80 கிலோ மீட்டருக்கு மதுக்கடைகளை கடைகளை திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |