ப.சிதம்பரத்திற்கு காவலை அக்டோபர் 3_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
இதற்க்கு ப.சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நான்கு நாட்களுக்கு மேல் காவலை நீட்டிக்க கூடாது என்று வாதிட்டனர். இந்நிலையில் சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிபதி ப.சிதம்பரத்துக்கு மேலும் நீதிமன்ற கவலை நீட்டித்து உத்தரவிட்டது. அதே போல ப.சிதம்பரத்துக்கு மறுத்து சிகிச்சை அளிக்கவும் , அக்டோபர் 3_ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.