Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்…. முதல்ல கேட்குறத கொடுங்க… மோடி அரசை சீண்டும் உதய்…. கடுப்பில் பாஜகவினர் …!!

நேற்று திமுக இளைஞரனி – மாணவரணி போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு நிதி ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியே நிறைய நிலுவையில் இருக்கு. மத்திய அரசின் நிதி கிடைக்கலை என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஜிஎஸ்டில் பல ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும். இந்த கொரோனாவால் நிவாரண உதவி கேட்டு இருக்கோம். அந்த நிதி தொகை எதுவும் கிடைக்கவில்லை. அதெல்லாம் முதலில் கொடுக்க சொல்லுங்க.

மத்திய அரசு நம்முடைய கல்வியை முடக்க பார்க்கிறது. முன்னாடி மருத்துவர்கள் நிறைய பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். நீட்டை கொண்டு வந்து முடக்குநாங்கலோ அதே மாதிரி தமிழ்நாட்டுல இன்ஜினியர்ங் படிச்சு வெளிநாட்டுக்கு போறத தடுக்கணும் என்று கொண்டுவர ஒரே காரணம் தான் இந்த திட்டம். இதை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இதை கண்டிப்பாக கைவிட வேண்டும்.

சூரப்பாவுக்கு பின்னாடி மோடிதான் இருக்கிறார். அவருக்கு பின்னாடி எடப்பாடி இருக்காரு எடப்பாடிக்கு பின்னாடி ஓபிஎஸ் இருக்காரு. ஒருத்தருக்கு ஒருத்தர் பின்னாடி நின்னு எப்போ காலை வாரி விடுவார்கள் என்று தெரியாது. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் அனேகமா திரு சூரப்பா அவர்களும் இருப்பாரு என்று நான் நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு நிழல் முதலமைச்சர் மாதிரி அவர் பாட்டுக்கு ஆர்டர் போடுகிறார்.

சுரப்பா சொல்லுறது அமைச்சருக்கு தெரியாது என்கிறார். இது அதிமுக ஆட்சி, அவர்கள் போடுகிற இரட்டை வேடம். அவர்கள் கட்சிதான் அண்ணாவின் பெயரில் ஆரம்பித்து பாஜகவை நடத்த வைக்கிறார்கள் என்றால். இப்போ அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் அண்ணா பேரையும் அடகு  வைக்கிறார்கள். மாணவர்கள் ஒரு குழப்பமான நிலையில் இருக்கிறார்கள்.

நீட் கொண்டுவந்து 13 மாணவர்கள் இறந்துவிட்டார். இப்போது நீட் ரிசல்ட் வேற வரப்போகுது என்று நினைக்கிறேன். இதுல அரியர் எல்லாம் கிளியர் என்றார்கள் அதுவும் இப்ப இல்லை என்றார்கள். எல்லாத்தையுமே ஒரு குழப்ப நிலையில் வைப்பது தான் அதிமுக ஆட்சி. நாங்க சொல்ற மாதிரி சொல்லுவோம் செய்ற மாதிரி செய்வோம் அப்படின்னு இந்த மோடி அரசும், அதிமுக அரசு மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |