நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ?
இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த பயலுங்க. எதற்கெடுத்தாலும் ஆயிரம் ரூபாய்.என்னுடைய பிள்ளைகள், தங்கச்சிகள் கல்லூரிக்கு போகும்போது எனக்கு ஆயிரம் ரூபாய் காசு கொடுத்தால் தான் நான் படிக்கப் போவேன் என்று யார் சொன்னா ? நீங்கள் கொடுத்த எதையாவது என் மக்கள் வீதியில் நின்று கேட்டு போராடியது உண்டா ? ஒன்று சொல்லுங்கள்.
மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஃபேன் ஏதாவது…. இல்லையென்றால் ஆயிரம் ரூபாய் அதையெல்லாம் நாங்கள் கேட்டோமா ? கல்லூரிக்கு போகிறோம். நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் போவோம் என்று யாராவது சொன்னார்களா ? பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள். ஒரு பொங்கலுக்கு 1000 ரூபாய், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு யாராவது கேட்டார்களா ?
ஒரு முழம் கரும்பு எங்களுக்கு, ஒரு முழம் கயிறு உங்களுக்கு. தன்மானத்திற்காக உயிரைவிட்ட ஒரு இனத்தின் கூட்டத்தை அவமான சின்னமாக அலையவிட்டுட்டு, உலகத்திற்கு சோறு போட்ட ஒரு இனத்தின் பிள்ளைகளை… அரை கிலோ, ஒரு கிலோ அரிசிக்கு கையேந்த வைத்துவிட்டு, ஆட்சி நடத்துறேன், ஆட்சி நடத்துறேன் என்று மாடல் என சொல்லுறீங்க என விமர்சனம் செய்தார்.