Categories
உலக செய்திகள்

நாங்க முழு காரணம்னு சொல்லுறீங்க…! உங்க முயற்சி ஜெயிக்காது – சீனா பதிலடி …..!!

கோவிட்-19 பரவலுக்குச் சீனாவை முழு பொறுப்பாக்கும் முயற்சி எந்நாளும் வெற்றி பெறாது என அந்நாட்டு அரசியல் ஆலோசனை மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் குயே வெய்மின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று (மே 19) பேசிய அவர், “உலக நாடுகளில் உள்ள சில அரசியல் தலைவர்கள் உள்நாட்டு அரசியலுக்காகவோ, மக்களை திசைதிருப்பும் நோக்கிலோ கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குச் சீனாவே முழுப் பொறுப்பு எனப் பழி சுமத்தி வருகின்றனர். இந்த முயற்சி எந்நாளும் வெற்றிபெறாது.

இப்பெருந்தொற்று உலக சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், சீனா அதன் வெளியுறவுக் கொள்கைகளில் நிலையாக நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையில், 2019 டிசம்பர் மாதம், தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிக் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது.

இந்நோயால் உலகளவில் இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சீனாவே முழுப் பொறுப்பு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே குயோ வெய்மின் இவ்வாறு கூறியுள்ளார்

Categories

Tech |