Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள்.

வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறது என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. உங்கள் தகவலுக்காக சொல்கிறேன்…  உத்திரபிரதேசம் மாநிலத்திலேயே பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுது, அங்கிருந்த சில கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையின் ஆங்கில பிரதி எங்களுக்கு வேண்டும் என்று கேட்டார்கள். ஏன் என்று கேட்டேன் ?

இல்லை உங்கள் வாக்குறுதிகளை நாங்கள் பின்பற்றினால் இங்கே வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும் என்று சொல்லுகின்ற அளவிற்கு.. கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதிகள் மக்களுடைய தேவைகளை உணர்ந்து தயாரிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தல் வாக்குறுதிகள்.  என்பது வேறு அல்ல. நாங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் உங்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என்ற, உறுதியினை சொல்வதுதான் தேர்தல் அறிக்கை.

அப்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால் எங்களுக்கு உங்கள் தேவைகள் தெரிந்திருக்க வேண்டும், தேவைகள் தெரிந்திருக்க வேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையின் நிலை தெரிந்து இருக்க வேண்டும், மக்கள் வாழுகின்ற பகுதி. அங்கே எழக்கூடிய பிரச்சனைகள், அதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் யாருக்கு தெரியும் என்றால், மக்களோடு ஒன்றாக பழக கூடிய கட்சியினருக்கு தான் தெரியும் என்பதன் அடையாளம் தான் அது என தெரிவித்தார்.

Categories

Tech |