இயற்கை அழகின் ரகசியம், கிராமத்தில் வாழும் பெண்களின் ரகசியமும் மஞ்சள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சள் நிறைய சக்தி உள்ளதாக உள்ளது.
உண்மையில் மஞ்சள் பல நினைக்காத அளவில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. ஆண்டிபயாடிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் நிறைந்தது. அதில் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.
முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில் மஞ்சள் தூளுடன் சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று முகத்தில் தடவி வந்தால் முக பருக்கள் நீங்கும்.
மஞ்சள் தூள், கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும் வாரம் 3 முறை செய்து வந்தால் பருக்கள் மறையும்.
மஞ்சள் தூளுடன், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் கருமை நீங்கும்.
முகத்தில் சுருக்கங்கள் காணப்பட்டால் மஞ்சள் தூளில், கரும்பு சாறு சேர்த்து தடவி வந்தால் சரியாகும்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் மஞ்சள் தூளுடன், மோர் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இருபது நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்படி செய்யும்போது முகம் பளபளக்கும்.
தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிக்க செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சளானது வெடிப்புக்களை போக்கும்.
கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.