Categories
தேசிய செய்திகள்

‘அல்வா’வுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடக்கி வைத்தார் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார் 

மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2020 -2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறது.

இந்நிலையில்  2020 -2021 ஆம்ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நிர்மலா சீதாராமன் அல்வா கொடுத்து அச்சிடும் பணியை தொடங்கிவைத்தார்.

இவ்வாறு ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணி, அல்வா பூஜையுடன் தொடங்கப்படுவது வழக்கம். பூஜைக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணி நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள

நார்த் பிளாக்கில் 10 நாட்களுக்கு நடைபெறும். பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் நார்த் பிளாக்கில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தொலைபேசி, ஈமெயில் ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்வதற்கு அனுமதி கொடுப்பதில்லை. எனினும், முக்கிய அதிகாரிகள் மட்டும்  தேவைப்பட்டால் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரகசியத்தை காக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

 

Categories

Tech |