Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலிச்சான்றிதழ் கொடுத்து…. 21 வருடங்களாக ஆசிரியர் வேலை…. ஏமாற்றிய நபர் கைது…!!

போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் அள்ளிபுதூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ஆம் வருடம் ராஜேந்திரன் மீது ஒரு புகார் கொடுக்க பட்டுள்ளது.

அதில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகார் மனுவை முதல்வரின் தனிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் பேரில் கிருஷ்ணகிரி முதல்வர் முன்னாள் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ராஜேந்திரன் பணத்தை கொடுத்து போலியாக 10, 12 மற்றும்  ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. மேலும் அவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றும், 21 வருடங்களாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |