ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு த.மு.மு.க கட்சியினர் சார்பில் உணவு வழங்கப் பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வருவது வழக்கம். இதற்கிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது, மனிதநேய மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ், மேலூர் முகமதியாபுரம் சலீம் ஆகியோர் இணைந்து முதியோர் இல்லத்துக்கு நேற்று மதிய உணவாக பிரியாணியை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேலூர் த.மு.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.