Categories
மாநில செய்திகள்

“நிவாரணம் அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போல உள்ளது” – உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போன்றது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்த நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மத்திய அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இது குறித்து உயர் நீதிமன்றம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதில் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது என்பது தற்கொலையை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கொடுத்துள்ளது.

Categories

Tech |