Categories
உலக செய்திகள்

‘நமக்கு நாமே குழி வெட்டுகிறோம்’…. கிளாஸ்கோ உச்சிமாநாட்டில்…. ஐ.நா.பொதுச்செயலாளர் உரை….!!

கிளாஸ்கோவில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளில் ஐ.நா பொதுச்செயலாளர் உரையாற்றினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நா.வின் 26வது காலநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெர்ஸ் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,  “புதைபடிவ எரிபொருளுக்கு நாம் அனைவரும் அடிமையாக இருக்கின்றோம். நாம் எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிடில் அது நம்மை எடுத்துக்கொள்ளும்.

குறிப்பாக நாம் எவ்வளவு ஆழமாக எரிபொருளுக்காக பூமியை தோண்டுகிறோமோ அது நமக்கு நாமே சவக்குழிக்குயை வெட்டுவதற்கு சமம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் மாநாட்டிற்கு வெளியே இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான  கிரேட்டா தென்பெர்க் கூறியதில் “அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் நமது வருங்காலத்தை பொருட்படுத்தாமல் உள்ளனர். மேலும் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வருங்காலத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வது போன்று அவர்கள் நடிக்கிறார்கள். மாற்றம் என்பது உள்ளே இருந்து வரப்போவதில்லை” என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Categories

Tech |