கிளாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டில் பிரித்தானியா இளவரசர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரித்தானியா மகாராணியின் மகனும் இளவரசருமான சார்லஸ் மாநாட்டில் நடைபெற்ற துவக்க விழாவில் உரையாற்றுவதற்காக மேடை ஏறியுள்ளார்.
அவ்வாறு அவர் ஏறும்பொழுது லேசாக படி தடுமாறி கீழே விழப்போவது போன்று சென்றுள்ளார். இதனை அடுத்து கவனித்து கொண்டு நடந்துள்ளார். குறிப்பாக 95 வயதான பிரித்தானியா மகாராணியார் எலிசபெத் தான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நலம் கருதி இளவரசர் சார்லஸ் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.