Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணாடி டம்ளர், காப்பி குடிக்கிற கப்… ADMK ஆபீஸ்ல வேற ஏதும் இல்ல..! கோவை செல்வராஜ் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒரு சொந்த கட்சியானான அண்ணா திமுகவில் திருடுகின்ற வேலை செய்கின்ற நிர்வாகிகள் நாங்கள் அல்ல. எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்… பத்திரங்கள் எல்லாம் காணோம் என்கிறார்கள், அண்ணா திமுகவினுடைய அலுவலக கட்டிட பத்திரங்கள் என்ன மேசையின் மீது வைப்பார்களா?

ஒன்று லாக்கரில் இருக்கும். இல்லை என்றால் பீரோவில் இருக்கும். இரண்டிலும் இல்லாமல் வெளியே வைத்துவிட்டு சென்றோம்,  எடுத்துட்டு போயிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதை எப்படி நம்புவது ? யார் எடுத்துக் கொண்டு போக முடியும் ? ஏதாவது ஒரு பத்திரம் அவர்கள் எடுத்துட்டு போனார் என்று சொல்ல சொல்லுங்கள், அந்த இடத்தில் நானே பதில் சொல்லுகிறேன். அதற்கு என்ன வேண்டுமானாலும் தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறோம்.

அங்கே என்ன விலை உயர்ந்த பொருள் என்றுதான் நான் கேட்கிறேன், அங்கே ஒரு பொருளும் இல்லை, எந்த பொருளுமே கட்சிக்கு என்று யாருமே நினைவு பரிசு வழங்க மாட்டார்கள், ஒன்று முதலமைச்சருக்கு கொடுப்பார்கள்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கொடுப்பார்கள். அது அவர்கள் வீட்டில் காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள். கட்சி அலுவலகத்தில் எந்த பொருளும் விளைவு உயர்ந்த பொருள்களும் கிடையாது.

அங்கு இருக்கிறது கண்ணாடி டம்ளரும்,  பிளாஸ்டிக் காபி குடிக்கிற கப்பும் தான் மஹாலிங்கம் என்பவர் ரூம்மில் வச்சு இருக்கிறார்கள் ,கம்ப்யூட்டர் இருக்கிறது வேறு எந்த பொருளும் இல்லை .வேறு வெளி ஆட்கள் யாரும் இல்லை.. கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்,  கட்சி அலுவலகத்திற்கு சொந்தக்காரர் அண்ணன் ஓ பன்னீர்செல்வம்., அவர்தான் பொருளாளர். அவரை குற்றச்சாட்டு சொல்கிறீர்களே..  உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி, நேர்மை இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |