ஒரு மின்னஞ்சலை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் ஜிமெயில் பயனர்கள் மெயிலினை டவுன்லோடு செய்து அதனை புதிய மெயிலாக அனுப்ப வேண்டும்.
ஆனால் இப்படி செய்வது சற்று சிக்கலான பணி என அனைவரும் அறிவர். சமீபத்தில் கூகுள் இந்த பணியினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

புதிய அம்சம்
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு மின்னஞ்சல்களை டவுன்லோடு செய்யாமல் அவற்றை மின்னஞ்சலில் இணைத்துக் கொள்ள முடியும். புதிய அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு மெயில்களை மின்னஞ்சல்களில் வேகமாகவும், மிக எளிமையாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

கூகுள் அறிவித்து இருப்பது போன்று இந்த அம்சம் வழங்கப்பட்டால், மின்னஞ்சல்களில் அட்டாச்மென்ட் செய்ய இரண்டு வழிமுறைகள் இருக்கும். இவ்வாறு இணைக்கப்படும் மெயில்கள் .eml எனும் ஃபைல் ஃபார்மேட்டிற்கு மாற்றப்பட்டு விடும். இவற்றை க்ளிக் செய்தால் வேறொரு புதிய டேபில் அது திறக்கப்படும்.

முதல் வழிமுறை:
– முதலில் பிரவுசரில் ஜிமெயில் சென்று லாக் இன் செய்ய வேண்டும் – அடுத்து இன்பாக்ஸ் சென்று நீங்கள் இணைக்க விரும்பும் மெயில்களை இணைக்க வேண்டும் – இனி கம்போஸ் பட்டன் க்ளிக் செய்து தேர்வு செய்யப்பட்ட மெயில்களை கம்போஸ் பாக்ஸ் இல் டிராக் – டிராப் செய்ய வேண்டும் – மின்னஞ்சல்கள் வழக்கமான அட்டாச்மென்ட் போன்று இணைக்கப்பட்டு விடும்

இரண்டாவது வழிமுறை:
– முதல் வழிமுறையில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று, அனுப்ப வேண்டிய மெயில்களை தேர்வு செய்ய வேண்டும் -தேர்வு செய்ததும், மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் – இனி ஃபார்வேர்டு ஆஸ் அட்டாச்மெனஅட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
பாப் அவுட் ரிப்ளை
உங்களுக்கு ஏற்கனவே வந்த மின்னஞ்சலில் பல்வேறு மெயில்களை அனுப்ப, பாப் அவுட் ரிப்ளை எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். இவ்வாறு செய்ததும், புதிய ஆப்ஷன்தெரியும். அங்கு மெயில்களை டிராக் – டிராப் செய்ய வேண்டும்.