Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே…! பணம் கேட்டால்…. புகார் கொடுங்க….. இமெயில் முகவரி வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்க ஈமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்,

தமிழகத்தில் மாணவர்களிடம் முழு  கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மீது புகார் அளிக்க வசதியாக ஈமெயில் முகவரி உருவாக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால்  [email protected] என்ற இமெயில் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |