Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… கூலித்தொழிலாளிக்கு வந்த நிலைமை… 5 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு கண்டித்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் முத்துவேலின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். மேலும் முத்துவேல் மனைவி பராசக்தியையும் இழிவுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த 3 பேர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துவேல் பாண்டி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஜெயமங்கலம் போலீசார் குமார் உள்பட 5 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |