பிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது தாத்தா இருக்கும் குடும்ப புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது தாத்தாவின் புகழைப் பற்றியும், அவரது வீட்டில் தான் செய்த சுட்டித் தனங்களை பற்றியும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது தாத்தா ஒரு தோட்டை அன்பளிப்பாக கொடுத்ததை பற்றியும் பதிவிட்ட அவர் கடைசியாக சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/COmjgs_jAuC/?igshid=ttbkaimvnqv0