Categories
உலக செய்திகள்

அங்க போய் தங்கி இருந்து…. தடுப்பூசி போட்டுட்டு வந்துரலாம்…. வெளியான தகவல்…!!

பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சில நிறுவனங்கள் தடுப்பூசிக்கான ட்ராவல் பேக்கேஜ்ஜை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

மேலும் சில நிறுவனங்கள் பிரிட்டன் செல்ல விரும்புவர்களுக்கு 3 இரவுகள் கொண்ட சிறப்பு பேக்கேஜ்ஜை அறிமுகப்படுத்தலாம் என்றும் ஆலோசித்து வருகின்றன. ஆனால் தற்போது மக்கள் லண்டன் செல்ல உகந்த காலம் இல்லை என்றாலும், இது குறித்து அதிகமான மக்கள் தங்களது நிறுவனத்தை தொடர்பு கொண்டு வருவதாக டிராவல் ஏஜென்சிகள் கூறுகின்றன. லண்டனில் உள்ள சில மருத்துவமனைகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள பேசி வருவதாகவும் கூறியுள்ளன.

இதனால் அங்கேயே தங்கி இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு நமது நாட்டுக்கு திரும்பிவிடலாம் என்றும் டிராவல் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. பைஸர் மட்டும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் மக்களுக்கு போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பிரிட்டனுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |