தமிழகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதற்கு எதிராகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று நடிகை ஓவியா பதிவு செய்திருந்தார். எனவே ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் சிபிசிஐடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று பதிவு செய்திருந்தார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கை பின்தொடர்ந்து வரும் ஏராளமானவர் அந்தப் பதிவை பார்த்துள்ளனர். மோடி அரசியல் நிகழ்ச்சிக்கு சென்னை வரவில்லை அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் அவர் சென்னை வந்திருந்தார்.
அதோடு இல்லாமல் அரசியல் குறித்து எந்த கருத்தும் சென்னை பயணத்தின்போது குறிப்பிடவில்லை .அப்படி இருக்க நடிகை ஓவியா திட்டமிட்டு மோடிக்கு எதிராக இந்த பதிவை போட்டுள்ளார். எனவே ஓவியா பதிவு செய்வதற்கு உள்நோக்கம் இருக்கிறது. அரசு விழாவில் கலந்து கொண்ட மோடிக்கு எதிராக அவர் பதிவு செய்ததன் காரணம் என்ன? பின்னணி என்ற என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், இவர் ட்விட்டர் கணக்கை முடக்கி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.