Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா போக வேண்டாம்” முடிவை மாத்திக்கோங்க… ரஜினியிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!!

ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த பட சூட்டிங் கொரோனவைரஸ் பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வரும் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.. ரஜினி அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் ஹைதராபாத் சூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது சரத்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே ரஜினி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ரஜினிக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஹைதராபாத் சூட்டில் பங்கேற்பது பாதுகாப்பு இல்லை என்று ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் ரஜினியிடம் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், ஹைதராபாத் போக வேண்டாம் என்று ரசிகர்கள் அன்பான கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் அண்ணாத்த படம் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக்க வேண்டியிருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அண்ணாத்த பட வேலையை முடிக்க விரும்புகிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |