சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்ய வேண்டும்.சென்னையில் ஐந்து மண்டலங்களில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பாதிப்பை விட சென்னை பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா ?
கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் மாநில பாதிப்பை விட ராயபுரம் பாதிப்பு மிக மிக அதிகம். சோதனைகள் உடனே செய்யப்படுவதில்லை, சோதனை முடிவுகளுடன் சொல்லப்படுவதில்லை. மக்களை காக்கும் பணியில் உள்ள மருத்துவரை போராடும் நிலைக்கு அரசு வைத்திருப்பது வேதனை. சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதுதான் ஊரடங்கு அமலில் இருக்கும் லட்சணமா ? என்று முக.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.