கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தநிலையில் தமிழக முதல்வர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதில் , அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்குவது தொடர்பாக , அரிசி , பருப்பு போன்ற உணவுப் பொருட்களாக வீடுகளிலேயே சென்று விநியோகிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். ஏற்கனவே கேரளாவில் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி செயல்படுகிறது இதில் மூலமாக பயன்பெறக்கூடிய 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு பொருட்கள் என்பது 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நேரடியாக வீடு சென்று விநியோகிக்க வேண்டும் என்ற உத்தரவை தெரிவித்திருக்கிறார்கள்.