நிவர் புயல் நாளை மறுதினமும் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அது தொடர்பான அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிட்டார்.
இதில் மிக முக்கியமான மிக மிக முக்கியமான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் 24.11.2020 நாளை மறுதினம் மதியம் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து ஒத்தி வைக்கப்படுவதாக தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து 25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
வருவாய், தீயணைப்பு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம், மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் 23.11. 20 அதாவது இன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருள் உடன் ஜேசிபி, லாரி, மின்சாரம் மர அறுப்பு இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின்கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.