Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்க போறாங்க போங்க…. சீரியலில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்…. தெறிக்கப்போகும் எபிசோடுகள்…!!

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமம் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் தற்போது இந்த மெகா சங்கமத்தில் சிறந்த குடும்ப உறவுகளுக்கான தேடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்கள் ரியோ, சம்யுக்தா, சோம் சேகர் ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் குக் வித் கோமாளி பிரபலங்களும்,பிக் பாஸின் மற்றொரு பிரபலமும் இணைந்துள்ளனர்.

எப்படி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் சிவாங்கி, பாலா மற்றும் சுரேஷ் ஆகியோர் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இவர்கள் இந்த சீரியலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சீப் கெஸ்டாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |