Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களை ஊக்குவிக்க… போனஸ், சம்பள உயர்வு, கூடுதல் விடுமுறை… தனியார் நிறுவனங்கள் அதிரடி..!!

இந்தியாவில் நிலவி வரும் சூழ்நிலையில் பல இந்திய நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் பல ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. போனஸ் மற்றும் ஓய்வு நாட்கள் உள்ளிட்ட பல சலுகைகளை கொடுக்கத் தொடங்கியது.

நோய்த்தொற்றுக்கு மத்தியில் ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்துஸ்தான், யூனிலீவர், டெலாய்ட், ஸ்விகி,பி.வி.சி, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வாராந்திர மற்றும் மாதாந்திர சலுகைகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் கால இடைவெளியில் விடுமுறை வழங்குகின்றது.

இதுமட்டுமில்லாமல் உணவு வினியோகம் தளமான ஸ்விகி தனது ஊழியர்களை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நான்கு நாட்கள் வேலை செய்து விட்டு மற்ற நாட்களை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டெலாய்ட், பிவிசி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கியுள்ளது.

Categories

Tech |