Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாங்க வெளிய போகலாம்….. கூடுதல் வழக்கு….. மீண்டும் சிறையில் அடைப்பு….!!

திருவாரூர் அருகே பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்கள் மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 4 1/2  தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த இறையரசன் அருண்குமார் ஆகிய நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு   உள்ளதாகவும்,

அவர்கள் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் சிறையில் இருப்பதாகவும் தெரியவந்ததை அடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் அவர்களை மீட்டு நன்னிலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு ரோஷினி என்பவரிடம் தங்கச் சங்கிலியை பறித்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்கள் மீது கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |