Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

33 மாவட்டத்துக்கும் போங்க…”மாஸ் உத்தரவு போட்ட எடப்பாடி” அதிரடியான அறிவிப்பு வெளியீடு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் மீதமிருக்கும் 33 மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு  கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய பணி என்பது பார்த்தோமென்றால் மாவட்டங்களில் செயல்பட்டு வரக்கூடிய கொரோனா  தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு  பணியில் ஈடுபட வேண்டும். இவர்கள் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தங்களுடைய பணிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |