உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும். மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது.
அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் இருக்கிறது, 100 டிவிசனில் 138 வார்டு செயலாளராக இருக்கிறார்கள். நீங்கள் 100 டிவிஷனில் வீடுவீடாக நோட்டீஸ் கொடுத்து, இன்றைக்கு மாநகராட்சி பகுதியில் மக்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லா பக்கமும்.. இப்போது பார்த்தீர்கள் என்றால் ?
வீட்டு வரி உயர்வில், வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இங்கே இருக்கின்ற லோக்கல் பிரச்சினைகளை சேர்த்து, முக்கியமான பிரச்சினைகள் வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு எல்லாம் சேர்த்து அடிப்படை உயர்வு…. எல்லா பக்கமும் ரோடு போடவில்லை… குனியாமுத்தூர் பொதுமக்களே ஆரம்பித்து விட்டார்கள், மறியல் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே பார்த்தீர்கள் என்றால் ? அவ்வளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த அரசாங்கம், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
யாராலும் நடக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள் போராட்டம் செய்கின்றார்கள். எனவே இந்த நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் எதுவும் கண்டு கொள்கின்ற மாதிரி தெரியவில்லை. ஆகவே இந்த அரசும் அப்படித்தான். எல்லா விலையும் அதிகம் செய்து விட்டார்கள். ஆகவே இந்த மூன்று தேதியில் கண்டிப்பாக ஒவ்வொரு டிவிசனிலும் ஒவ்வொரு பகுதியிலும் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும், நோட்டீஸ் கண்டிப்பாக கொடுக்க வேண்டும், அதேபோல அழைப்பு கண்டிப்பாக வீடுவீடாக கொடுக்க வேண்டும், நிர்வாகிகளுக்கு நாங்களே மூன்று மாவட்டத்தை சேர்த்து அழைப்பிதழ் கொடுப்போம், அதை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை சரியாக செய்ய வேண்டும்.