Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பள்ளிக்கு போ” பெற்றோர் கண்டித்ததால்…. பிளஸ் டூ மாணவர் தற்கொலை…!!

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசிப்பவர் குருவையா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளையமகன் பரமகுரு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக வீட்டில் இருந்ததால் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்துள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பரமகுரு பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி திரிந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவருடைய பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு பரமகுருவை கண்டித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பரமகுருவின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |