Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு செல்லுங்கள்- மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா பொது முடக்க காலத்திலும் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. சமூக விதிகளை கடைபிடித்து கல்வி நிலையங்களில் கல்வி குறித்தான நடவடிக்கையில்  மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் தமிழகத்திலும் பல வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தொடங்கி ஏராளமான விஷயங்களுக்கு மாணவர்கள் பள்ளி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. மாணவர்கள்  கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |