Categories
மாநில செய்திகள்

ஊருக்கு போறிங்களா…”5 இடங்களில் பேருந்து நிலையம்” தெரிஞ்சுக்கோங்க…!!

தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில்

ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

காஞ்சிபுரம்,  வேலூர் , கிருஷ்ணகிரி , ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளன.

விக்கிரவாண்டி , பண்ருட்டி மார்க்கமாக தஞ்சாவூர் , கும்பகோணம் போன்ற பகுதிகளுக்கு தாம்பரம் மெப்ஸ் பகுதியிலிருந்து இருந்தும் பேருந்து இயக்கப்படும்.

பாண்டிச்சேரி , கடலூர் , சிதம்பரம் போன்ற மாவட்டங்களுக்கு கே.கே நகரில் இருந்து பேருந்து இயங்கும்.

தொலைதூர , தென் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படம்.

கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும்  தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

என்று தெரிவித்த அமைச்சர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் , ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகள் சிறப்பாக இருப்பதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |