Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா…. தேசிய போர் நினைவிடத்திற்கு… குடியரசு தலைவர் மரியாதை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா போன்றோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

சுதந்திரத்திற்கு பின், ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் இந்த தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டது. இதை, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, நாட்டு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைதியான வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஏதாவது  நடந்தாலும் அதற்கு தகுந்த பதிலடி தரும் திறனும் நமக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றினார். சென்ற ஆண்டை  ஒப்பிடும் போது, 20 விழுக்காடு விவிஐபிக்கள் மட்டுமே இந்தாண்டு செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு பின்பற்றப்பட்டன.

Categories

Tech |