Categories
அரசியல்

ADMK இல்லாம போயிட்டு… எல்லாரும் ஒன்றா இணையுங்கள்… கனிமொழி அட்வைஸ்!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அந்த கடமை மிக முக்கியமான அளவில் நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை, எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இன்று யாரோடு அவர்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராக கூடாது, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்கு போய் படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வரக்கூடாது என்று எல்லாவற்றிலும் நுழைவு தேர்வை கொண்டு வந்து நுழைந்து  கொண்டிருக்கக்கூடிய பாஜகவோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தமிழ்நாட்டை காக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடிய ஓன்று. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களுக்காக, அவர்களுடைய உரிமைகளுக்காக, அவர்களுடைய எதிர்காலத்திற்காக, திட்டங்களை வகுத்து நமக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு நின்று தேர்தலை சந்திக்க வேண்டும், இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என்பதுதான் அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று.

நம்மை எதிர்த்து விடலாம்,  வீழ்த்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க கூடியவர்கள்… இங்கு வந்து திமுக ஹிந்துக்களுக்கு  எதிரானவர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என்று ஒவ்வொரு முறையும் தொடர்ந்து பொய்யுரைகளை சமூக வலைதளத்தில் போட்டு கொண்டே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |