Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலக்கோ 2… அடைந்ததோ 3… கோடியில் புரளும் பாஜக..!!

பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து  விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம்  20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக அந்த இலக்கை தாண்டி  3,78,61,653 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அக்கட்சியில் 14 கோடியே 78 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் விரைவில் மாநிலங்கள் வாரியாக உறுப்பினர்கள் பதிவு குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |