Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கோலி அதிரடி அரை சதம்…! பாக்..கை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி ..!!

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது.

பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்,  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் இப்திகார் அகமது – ஷான் மசூத் ஆகியோரின் சிறப்பான அரை சதத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி , புவனேஷ்குமார் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினர். 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களிலே இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இன்றய டார்கெட் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் துணை கேப்டன் கே.எல் ராகுல் களமிறங்கினர்.

நசீம் வீசிய 2ஆவது ஓவரின் 5ஆம் பந்தில்  கே.எல் ராகுல் 4ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பின்னர் கிங் கோலி களமிறங்க, இந்திய அணி ஸ்கோர் 10 ரன் இருந்த போது ராப் பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் முதல் பந்திலே 4 ரன் எடுத்து ஆட்டத்தை தொடங்கினார்.இந்திய அணியின் ஸ்கோர் 5.3 ஓவரில் 26 இருந்த போது  ராப் பந்தில் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அக்ஷர் பட்டேல் 2 ரன் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேற  கோலி – ஹர்டிக் பாண்டியா களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் இந்திய அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.11ஆவது ஓவரில் 9 ரன்கள் எடுத்த கோலி – ஹர்டிக் பாண்டியா ஜோடி முஹம்மத் நவாஸ் வீசிய 12ஆவது ஓவரில் ( 6.1.6.0.1.6) என 20 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய கிங் கோலி அரை சதம் அடித்து அதிரடியை காட்ட ஆரம்பித்த கோலி 19ஆவது ஓவரின் கடைசி 2 பந்தில் 6,6 என அடித்து பாகிஸ்தான் பவுலர்களை பதற விட்டார். கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான கட்டத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்டிக் பாண்டியா 37 பந்தில் 40 ரன்னில் நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

கோலி – ஹர்டிக் பாண்டியா ஜோடி 113  (78) எடுத்து அசதியுள்ளது. பின்னர் களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் 1 ரன் அடிக்க 4 பந்தில் 15 ரன் எடுக்க வேண்டிய நிலையில் விராட் கோலி 2 ரன்கள் எடுத்தார். பின்னர்  இந்திய அணி வெற்றி பெற  3 பந்தில் 13 ரன்கள் என்று பரபரப்பான நிலையில் சென்று கொண்டு இருந்த போது கோலி ஒரு சிக்ஸ் அடிக்க கடைசியில் 2 பந்துக்கு 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் அஸ்வின் எதிர்கொண்ட கடைசி பந்து வைட் செல்ல, 1 பந்துக்கு 1 ரன் எடுக்க வேண்டும் என்ற சூழலில் கடைசி பந்தில் அஸ்வின் 1 ரன் எடுக்க இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோலி 82*

Categories

Tech |