கோலி, நடராஜனை வெகுவாக பாராட்டியதன் மூலம் அவர் வரும் உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் நடராஜனை புகழ்ந்து தள்ளி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி நடராஜன் இந்திய அணிக்கு சொத்து என்று பாராட்டி கூறியுள்ளார். இந்த போட்டி முடிந்த பின்பு கோலி, நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும் மற்ற வீரர்களை விட இவர் பெயரைச் சொல்லி பாராட்டியதுடன், நட்டு இந்திய அணியின் சொத்து என்றும் கூறியுள்ளார். என்றும் இந்திய அணிக்கு தேவையான பல திறமைகள் நடராஜனிடம் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து தன் திறமையை மேம்படுத்திக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாய்நிறைய நடராஜனை புகழ்ந்த விராட் கோலி, அவரை இந்திய அணியின் சொத்து என்றும் பாராட்டியிருப்பதை பார்த்தால், 2022 ஆம் வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரில் இவர் அணியில் இடம் பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.