Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்கு பணம் கேட்டது குத்தமா..? அதுக்கு இப்படியா பண்றது… அரியலூர் அருகே பரபரப்பு..!!

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு பணம் தரவில்லை.

இந்நிலையில் பொங்கலுக்கும் அவரிடம் ஆடுகளை கடனாக கேட்டுள்ளார். இதனால் பழனிச்சாமி அவரை திட்டி அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த பழனிவேல், பழனிசாமியிடம் நைசாக பேசி மது அருந்த அழைத்துச் சென்று மதுவை அவருக்கு ஊற்றி கொடுத்து, பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனிசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தப்பி ஓடிய அவரை கீழப்பழுவூர் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Categories

Tech |