மூளை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மூளை – 2
வற்றல் – 6
தேங்காய் – 4 சில்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 10
நல்லெண்ணெய் – மூன்று கரண்டி
மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மூளையை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். சீரகம் மற்றும் வற்றலை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், சுத்தம் செய்த மூளை, தேங்காய் பால், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
பின்பு குழம்பு கெட்டியாக எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும். இப்போது ருசியான மற்றும் சுவையான மூளை குழம்பு தயார்.