நாய்கள் கடித்து குதறியதில் 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநந்திபுரம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி உள்ளார். இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால் அதனை தனது நிலத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலையில் அங்கு சென்று பார்த்த போது செம்மறி ஆடுகளை மூன்று நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அந்த நாய்களை விரட்டி அடித்த குமுதா நாய்கள் கடித்ததில் 28 செம்மறி ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். மேலும் அதில் மூன்று செம்மறி ஆடுகள் உயிருக்கு போராடும் நிலைமையில் கிடைத்துள்ளன. அதன்பின் கால்நடை மருத்துவர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்று காயமடைந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.