மலை உச்சியில் சிக்கிய ஆணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் பொன்னுத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொன்னுத்தாய் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தனது ஆடுகளை மெய்த்துள்ளார். அப்போது இரையைத் தேடி இவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மலை உச்சிக்கு சென்றுள்ளது. இதனை அடுத்து பொன்னுத்தாய் மலை உச்சிக்கு சென்ற ஆடுகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார்.
அப்போது மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் அந்த இரண்டு ஆடுகளும் கத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மலை உச்சியில் சிக்கிய ஆடுகளை பத்திரமாக மீட்டு பொண்ணுத்தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.