Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்… பரிதாபமாக உயிரிழப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை செந்நாய்களின் கூட்டம் தாக்கியதில் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள தர்மராஜபுரத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 23 ஆடுகளை சொந்தமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் நேற்று காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக சூரங்குட்டம் மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 9 மணி அளவில் ஆடுகளை அங்கிருந்த தோட்டத்தில் விட்டுவிட்டு சிதம்பரம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அவரது ஆடுகளில் 11 ஆடுகள் அங்கு உயிரிழந்து காணப்பட்ட நிலையில் மீதமுள்ள ஆடுகள் காணாமல் போய்யிருந்துள்ளது. இதனை பார்த்து பதறிய சிதம்பரம் உடனடியாக காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் வந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் ஆடுகளின் உடலில் செந்நாய்களின் நக கீறல்கள் மற்றும் சில காலடி தடங்கள் கிடைத்துள்ளது.

மேலும் செந்நாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளை தாக்கியிருக்கலாம் என்றும், மீதமுள்ள ஆடுகள் மலை பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சூரங்குட்டம் மலைப்பகுதியில் ஆடுகள் இருக்கின்றதா என வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |