Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackAmitShah: அமித் ஷா மீது தாக்குதல் முயற்சி – பரபரப்பு

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித்ஷா திடீரென காரில் இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டது.

காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமித்ஷா தமிழகம் வருவதை தொடர்ந்து காலை முதலே #GoBackAmitShah என்ற ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்பு இன்று #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |