இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், அஞ்சல்துறை கணக்காளர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த ஹேஸ்டேக்கை இணையவாசிகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஓவியா தனது டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த ட்விட்டுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.