Categories
தேசிய செய்திகள்

#gobackmodi….. 22 % இந்தியா …. 59 % அமெரிக்கா ….. 15 % அரபு நாடுகள் …… பகீர் தகவல் …!!

#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை  வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் கூட மத்திய அரசு பணியில் ஹிந்தி நபர்கள் ஆதிக்கம் செலுத்துவது , ஹிந்தி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியது என மொழி அரசியலை தமிழக எதிர்க்கட்சிகள் கட்சிதமாக பயன்படுத்தி வந்தன.

இதை தொடர்ந்தே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம்  #gobackmodi  என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாவது மட்டுமல்லாமல் உலகளவில் ட்ரெண்ட் ஆகும்.இது பாஜகவுக்கு பெரும் தலைவலியாகவே அமைந்தது. பிரதமருக்கு எதிராக ஹேஷ்டாக் பதிவிட்டுவது உலகளவில் ட்ரெண்ட் ஆவது பாஜகவை வேதனையடைய வைத்தது. இந்நிலையில் இன்று சீன அதிபர் மற்றும் மோடி தமிழகம் வருகைக்கும் தமிழகத்தில் ஹேஷ்டாக் அனல் பறந்தது.

 

அதில் தமிழகமே மீண்டும் இந்திய பிரதமரை புறக்கணித்தது. அதே வேளையில் சீன பிரதமரை வரவேற்றது. #TN_welcomes_XiJinping  என்று ஹேஷ்டாக் பதிவிட்டும் , இந்திய பிரதமர் மோடியை எதிர்த்து  #gobackmodi என்ற ஹேஷ்டாக் பதிவிட்டு தமிழக மக்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மற்ற நாட்டு பிரதமரை வரவேற்ற தமிழக மக்கள் உள்நாட்டு பிரதமரை எதிர்ப்பது அனைத்து நாட்டு மக்களையும் உற்றுநோக்க வைத்தது.

இந்நிலையில் #gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை பயன்படுத்தி அதிக ட்வீட் போட்டது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் IT பிரிவு மாநில செயலாளர் இதுகுறித்து பதிவிட்ட  கருத்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது . அதில் #gobackmodi  என்று மோடிக்கு எதிராக 22 % இந்தியர்கள் தான் ட்வீட் பதிவிட்டதாகவும் , 59 % பதிவு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் இருந்தும் , 15 % ட்வீட் அரபு நாடுகளில் இருந்தும் பதியப்பட்டுள்ளது என்று தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மோடிக்கெதிராக அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் அரபு நாடுகள் #gobackmodi ஹேஷ்டாக் பதிவிடுவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1182563926568882177

Categories

Tech |